Description
Neermulli Vidhai podi – நீர்முள்ளி விதைப் பொடி
நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ வளரும். இது குத்துசெடி வகையை சார்ந்தது. இதன் விதைகள் அடந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த விதை ஆண்களுக்கு மிகுந்த ஆற்றலைத் தரும். உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் சிறப்பு குணம். இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. நீடித்த வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறவர்கள், அரை தேக்கரண்டி நீர்முள்ளி விதை பொடியை 200 மில்லி லிட்டர் மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் பருகினால் நோய் குணமாகும். நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. உடல் சூட்டால் உண்டாக கூடிய மேகநோய்கள், நீர் சுளுக்கு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று நோய்கள் மற்றும் கல்லடைப்புக்கு இது சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
Reviews
There are no reviews yet.