Description
Net weight:50grams
Elumichai thoal podi- எலுமிச்சை தோல் பொடி
எலுமிச்சை தோல் பொடியில் கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் சி போன்றவை உள்ளது. கூடுதலாக கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவற்றை கொண்டுள்ளது. எலுமிச்சைக்கு மணம் தரும் லிமோனின் என்னும் கலவை அதன் தோலிலும் உள்ளது. முகத்தில் முகப்பருக்கள் இருப்பவர்கள் தினமும் காலையில் முகத்தில் எலுமிச்சை தோல் பொடியில் பேக் போட்டு வந்தால் பருக்கள் குறையும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை தோல் பொடியை 5 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் குழைத்து கொள்ளவும். பிறகு பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காயும் வரை விட்டு பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவி விடவும். கை விரல் நகங்களை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை பொடி கலந்து பயன்படுத்தலாம். மிதமான வெந்நீரில் எலுமிச்சை பொடி சேர்த்து பத்து நிமிடங்கள் விரல் நகங்களை வெந்நீரில் ஊறவிட்டு 15 நிமிடங்கள் கழித்து நகங்களை தேய்த்து கழுவினால் நகங்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கி வெள்ளை பளிச் என்று இருக்கும். நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் பளிச் வெண்மையாக கூடுதலாக ஜொலிக்கும்.
Reviews
There are no reviews yet.