Description
Lavangapattai podi – லவங்கப்பட்டை பொடி.
இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதனுடைய மணம் மற்றும் தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால் தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இதிலுள்ள பினால் என்ற வேதிப் பொருளால் பட்டை வாய்துர்நாற்றம் நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.இது வெப்பம் தரும் நறுமணப் பொருளாக உள்ளதால் பட்டையை சளி மற்றும் ப்ளூ காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணியாக கருதப்படுகிறது. பூஞ்சைக் காளானால் வரும் நோய்களையும் குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reviews
There are no reviews yet.