Description
Net weight:50grams
Sadhakkuppai podi-சதக்குப்பை பொடி
இரத்த சோகை குறைய சதகுப்பை பொடியை கஷாயம் வைத்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும். மேலும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் இதை குடித்து வந்தால் இரத்தம் விருத்தியடையும். உடல் பலம் பெறும். அந்த பொடியை நீரில் கலந்து அருந்தினால் கபம் குறையும். மிளகு, சுக்கு, சதகுப்பை, ஏல அரிசி, தேன் அனைத்தையும் இடித்து வடிகட்டி வடிகட்டிய தூளை தேன் சேர்த்து சாப்பிட்டால் முறையாக பசி ஏற்படும். ரோஜாப்பூ பொடி மற்றும் சதகுப்பைப் பொடி ஆகியவற்றை இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்திருந்து வடிகட்டி கொடுத்துவர வயிற்று வலி குறையும். மாதவிடாய் தோன்றும் காலங்களில் ரத்தபோக்கு அதிகமாக இருக்கும். இவர்கள் சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி சம அளவு பனைவெல்லம் சேர்த்து அரைத்து 5 கிராம் காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து சோம்புக் குடிநீர் குடித்து வர மாதவிடாய் கோளாறு, அதிகமான ரத்தபோக்கு நீங்கி கருப்பை பலப்படும்.
Reviews
There are no reviews yet.