Description
Net weight:50grams
Veppilai Podi – வேப்பிலைப் பொடி.
முன்னோர்கள் காலத்திலிருந்தே வேப்ப இலை, அவ்வபோது பயன்படுத்த வேப்பம் பொடி தயாரித்து பயன்படுத்துவதுண்டு. இது உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யகூடியது. இதை உடல் அழகுக்கு வெளிப்புறத்திலும் உள்ளுக்கும் பயன்படுத்தலாம். வேப்பம் பொடி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக சான்றுகள் வலுவாக உள்ளது. இதன் பொடியில் இருக்கும் ஃப்ளவனாய்டுகள், ட்ரைடர்பெனாய்டு, அழற்சி எதிர்ப்பு உடல் உறுப்பு மற்றும் கிளைக்கோசைடுகளின் நன்மைகள் ரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்துகிறது. அதே போன்று ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கவில்லை என்பதையும் உறுதி செய்கிறது. வேப்பம் பொடி எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இதன் இலைகளில் சக்தி வாய்ந்த கால்சியம் மற்றும் தாதுப்பொருள் உள்ளது. இது வலுவான எலும்புகளை உருவாக்குகிறது. இது வீக்கத்தை குறைக்க செய்கிறது. பாரம்பரிய மருத்துவத்தில் வயதானவர்கள் கீல் வாத வலிக்கு இந்த வேப்பம் பொடி பற்று போடுவதால் எலும்பு ஆரோக்கியத்தை உறுதியாக்கலாம். வேப்பம் பொடி கசப்பு சுவை கொண்டிருந்தாலும் அது உடலை சமநிலை விளைவுக்கு உதவுகிறது. சிறிய அளவு வேப்பம்பொடி எடுத்துகொள்ளும் போது அது கல்லீரலை சுத்தம் செய்யவும் இரைப்பை கோளாறூகளிலிருந்து நச்சுகளை அகற்ற செய்கிறது. வாய்ப்பகுதி சுகாதாரம் வேப்பம் பொடியில் மேம்படுகிறது. வேப்பம் பொடியின் உமிழ்நீரில் பிஹெச் அளவு பராமரிக்க உதவுகிறது.
Reviews
There are no reviews yet.