மருதமரத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன.
மருதம்பட்டையில் உள்ள லிபிட் பெராக்ஸிடேஷன் இரத்தம் உறைதலைத் தடுப்பதோடு இதயத் தசைகளையும் வலுவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.அஸ்ட்ரின்ஜெண்ட் என்கின்ற துவர்ப்புத் தன்மை கொண்ட இரசாயனப் பொருள் மருதம்பட்டையில் உள்ளதால் இதனை கசாயமாகத் தயார் செய்து புண்களைக் கழுவினால் அவை விரைவில் குணமாகும்.குடல் தொடர்பான நோய்களுக்கு நன் மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் – இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருதம் பட்டையை பொடியை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரும் இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை கரைத்து அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு உதவுகின்றது.மூட்டுவலி, இடுப்புவலி உபாதைகளைக் குணப்படுத்தும் – நல்லெண்ணெயுடன் மருதம்பட்டைப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து விட்டு ஆறிய பின் வலி உள்ள இடங்களில் மசாஜ் செய்தால் மூட்டுவலி, இடுப்பு வலி சரியாகும். முடக்குவாதம், பக்கவாதம் இருப்பவர்களுக்கும் பயன் கொடுக்கும்.சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருதம்பட்டை சிறந்த மருந்தாகும். மருதம் பட்டை பொடியில் ஐந்து கிராம் தேன் சேர்த்து குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய்த் தீவிரம் கட்டுப்படும்.மன அழுத்தம், தூக்கமின்மைப் பிரச்சினைகளையும் சரி செய்ய மரதம் பட்டைப் பொடி சிறந்த மருந்தாகும்.வாய்ப்புண், தொண்டை வலியைப் போக்கும் – ஒரு டீஸ்பூன் மருதம் பட்டைப் பொடியை தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இளம் சூட்டில் அந்நீரால் வாயைக் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி, வாய்ப்புண் குணமாகும்.