Siddha - Roots of Wellness: சித்தம் – உடல்-மன-ஆத்ம நலம்

by: Harshini, October 5, 2025

Siddha - Roots of Wellness: சித்தம் – உடல்-மன-ஆத்ம நலம்

சித்த மருத்துவம்: நவீன ஆரோக்கியத்திற்கான பழங்கால ஞானம்


சித்த மருத்துவம் என்பது தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ் மக்களிடையே தோன்றிய ஒரு பழங்கால முழுமையான மருத்துவ முறை. உடல், மனம், உயிர் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் முறையே சித்த மருத்துவம் ஆகும்.


அடித்தளமும் மரபும்

  1. மனிதன் பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதி எனும் அடிப்படையில், பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பகுதி மற்றும் வாதம் (காற்று), பித்தம் (நெருப்பு), மற்றும் கபம் (நீர்) என்ற மூன்று உயிர்ச்சத்துகளால் இயங்குகின்றோம். நோய் என்பது இந்த தோஷங்களின் சமநிலையின்மையாகக் காணப்படுகிறது.
  2. சித்த மருத்துவத்தின் நூல்கள் ஆகஸ்தியர், திருமூலர், போகர் உள்ளிட்ட 18 சித்தர்களின் நூல்களில் இருந்து வந்துள்ளன. உடல் மற்றும் ஆன்மா இரண்டும் சமமாக பராமரிக்கப்பட வேண்டும் எனும் கோட்பாட்டுடன் செயல்படுகின்றது.


சிகிச்சை மற்றும் சிறந்த நடைமுறைகள்

  1. சித்த மருத்துவம் நாடித்துடிப்பு, தொடுதல், நாக்கு, தோல், கண்கள், பேசும் விதம், மலம், சிறுநீர் ஆகிய எட்டு வகை பரிசோதனை மூலம் நோயை கண்டறிகிறது.
  2. மூலிகை மருந்துகள் (தாவரங்கள், கனிமங்கள் மற்றும் உலோகங்களிலிருந்து பெறப்பட்டவை), பயிற்சிகள், சீரான வழிகாட்டு உணவு முறைகள் (பத்தியம், அபத்தியம்), காயகற்பம், யோகா ஆகியவை சிகிச்சையின் பகுதிகளாகும்.
  3. அன்றாட வழக்கங்கள், உணவு முறைகள், ஒழுக்கம் ஆகியன ஆரோக்கிய வாழ்வுக்கு மிக முக்கியமானவை.
‘உணவே மருந்து, மருந்தே உணவு’

எனும் கொள்கையை சித்தம் வலியுறுத்துகிறது. உணவு முறைகள் நிலை, காலநிலை மற்றும் உடல் தன்மைக்கேற்ப திட்டமிடப்படுகிறது.


நவீன காலத்தில் பங்கு

சித்த மருத்துவம் அதன் முழுமையான, தடுப்பு, மற்றும் புத்துயிர்ப்பு கவனத்தால் மூட்டுவலி, தோல் நோய்கள், வளர்சிதைமாற்ற கோளாறுகள், மற்றும் வயதானோர் ஆரோக்கிய பராமரிப்பு போன்ற நாட்பட்ட நோய்களை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.


Siddha Medicine: Ancient Wisdom for Modern Wellness


Siddha medicine is an ancient holistic medical system that originated in South India, particularly among the Tamil population. It focuses on the balance of the body, mind, and spirit to achieve overall health, longevity, and disease prevention.


Foundations and Tradition

  1. Siddha believes that humans are microcosms of the universe, composed of five elements—earth, water, fire, air, and space—and governed by three vital humors: vatham (air), pitham (fire), and kapham (water). Disease is seen as an imbalance of these humors.
  2. The tradition is traced to the 18 Siddhars, with Agastya, Tirumular, and Bhogar as prominent figures. Siddha teaches that the body and soul must be cared for together.


Treatment and Best Practices

  1. Diagnosis in Siddha includes eight key methods—pulse, touch, observation of tongue, complexion, eyes, stool, urine, and speech.
  2. Treatment combines herbal medicines (derived from plants, minerals, and metals), specific diets (pathiyam and apathiyam), rejuvenation therapies (Kayakalpam), and yogic practices to restore balance.
  3. Siddha highlights lifestyle management—proper food, seasonal and daily routines, and discipline as essential for maintaining health.
  4. Siddha emphasizes “food as medicine and medicine as food.” The diet is tailored to individual constitution and environmental factors.


Modern Role

Siddha continues to play a significant role in managing chronic diseases like arthritis, skin ailments, metabolic disorders, and in geriatric healthcare due to its holistic, preventive, and rejuvenative focus.