பிரண்டைப் பொடி அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. பிரண்டைப் பொடியை வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.இந்தப் பொடியை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும். வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது. பிரண்டைப் பொடியில் இருந்து கஷாயம் எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும். மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இந்த கஷாயம் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்த கஷாயம் நல்ல பலன் தரும்.