Vaivilangam podi – வாய்விளங்கம் பொடி வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. விதைகளின் வடிநீர் காய்ச்சல், தோல்நோய்கள், மற்றும் மார்புவலி போன்றவற்றில் பயன்படுகிறது. கருத்தடையாகவும் பயன்படுகிறது.கனியின் சதைப்பகுதி பேதி தூண்டும். கனியின் சாறு குளுமை தருவதுடன் வியர்வை தூண்டுவியாகும் மலம் இளக்கியாகவும் செயல்படுகிறது. இந்த கஷாயம், இருமல் மற்றும் வயிற்றுப் போக்கினைச் சரிப்படுத்தும். கனிகள் ஜீரணம் மற்றும் உடலின் நலம் தேற்றுதல், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றல், சீதபேதியினை கட்டுப்படுத்தல், தசைகள் சுருக்கியாக பலவகைகளில் பயன்படுகின்றன. ரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை போன்றவற்றிலும் உதவுகிறது.