சுக்குட்டி கீரை என்னும் மணத்தக்காளிக்கீரை. இவை மிளகு தக்காளி, மணல் தக்காளி என்றும் அழைக்கப்படுகிறது. வயிற்றுப்புண் வந்தால் அவை அல்சர் வரை கொண்டுவிடும். இந்த காலங்களில் மணத்தக்காளி பொடி, தொடர்ந்து சேர்த்து வந்தால் விரைவில் வயிற்றுப்புண் குணமாகும்.வாய்ப்புண் வந்தால் இந்த பொடியை வைத்து குணப்படுத்திவிட முடியும். சிறுநீர் சரியாக பிரியவில்லை என்று நினைப்பவர்களுக்கு கை கொடுக்க இந்த பொடிஉதவும்.மணத்தக்காளி சிறுநீர் கோளாறை நீக்குவதோடு சிறுநீர் பிரியவும் வழி செய்யும். மலச்சிக்கல் இருந்தால் அவற்றையும் குணப்படுத்தும்.