வெள்ளருகுபொடியை, இரண்டு சிட்டிகை வீதம் நீரில் கலந்து அன்றாடம் காலையில் பருகிவர வாதநோய், வயிற்றுவலி, குடல் வாய்வு, ஆண்மை குறைவு, மாதவிலக்கு கோளாறு, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது வெள்ளறுகு பொடி. உடலுக்கு உரம் ஊட்டும் டானிக்காக அமைவது, ரத்தத்தை சுத்திகரிப்பது, வாத நோயை போக்குவது, வீக்கத்தைக் கரைப்பது, மனக்கோளாறை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது, இதயத்துக்கு பலமூட்டுவது, பசியைத் தூண்டுவது, மலத்தை இளக்குவது, உடல் வெப்பத்தைப் போக்குவது என எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது வெள்ளறுகு. உடலில் கலந்த நச்சுக்களை நீக்குவதாகவும் வெள்ளறுகு விளங்குகிறது.