ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது.மேலும் இதன் தோலில் பாலிபினால்கள், தாவர கலவை உள்ளதால், நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும், உடல் பருமனை பராமரிக்கவும் உதவுகிறது பழத்தை விட தோலில் பாலிபினால்கள் அதிகளவில் காணப்படுகிறது. ஆரஞ்சு தோல்களில் இருக்கும் எண்ணெய்கள் போன்ற பொருள் தோல் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. சுவையான இந்த பழத்தின் தோல்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால்,செரிமான சம்பந்தமான பிரச்சணைகளுக்கும் உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு, ஆரஞ்சு பழத்தின் தோல் பயன்படுகிறது. இதில் அதிக அளவுள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தை மிளிரச் செய்கிறது. ஆரஞ்சு பழத்தோல் பொடி, இந்த பொடி சருமத்தை இயற்கையாக பிரகாசமாக்கும். இந்த தூளை தினமும் முகத்தில் தேய்த்து வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் குறையும். . இந்த ஆரஞ்சு தோல் பொடியை தயிருடன் சேர்த்து பேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.