இதன் இலையை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளிக்க தோல்நோய்கள் தீரும். கல்யாணமுருங்கை இலை கஷாயத்தை 30மிலி வீதம் 10 நாட்களுக்கு சாப்பிட மாதவிடாய் வலி நீங்கும். இதன் இலைப்பொடியை கட்டிகளுக்கு போட கட்டிகள் குணமாகும். இலைக்கஷாயத்தை 5 மிலி அளவு எடுத்து மோரில் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் உடனே குணமாகும். கல்யாண முருங்கை இலைப்பொடியை 5 மிலி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான குறைகள் நீங்கும் கருமுட்டை உற்பத்தி அதிகரிக்கும். கல்யாண முருங்கை இலைப்பொடியை எடுத்து 5 மிலி அளவு சாறு அதே அளவு வெந்நீர் கலந்து சாப்பிட வாந்தி வரும். வயிற்று புளிப்பு நீங்கும். குடற்பூச்சியை அகற்றும், செரிமாணத்திறனை அதிகரிக்கும். கல்யாண முருங்கை இலைப்பொடியுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து சாப்பிட்டால், ஆண்மை பெருகும், தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு உறவில் ஆர்வம் ஏற்படும்.