நெஞ்சு சளி பிரச்சனை வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் உண்டு. நெஞ்சு சளி அதிகமாகும் போது அவை நுரையீரல் வரை தொற்றை உண்டாக்கிவிடக்கூடும். சிற்றரத்தை பொடி அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதை சுத்தமான தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் நாள்பட்ட நெஞ்சு சளி வேகமாக குறையும். ஆஸ்துமா குணப்படுத்த சிலர், இரைப்பு இருமல் எனும் ஆஸ்துமா பாதிப்பால், மூச்சடைக்கும் வேதனையை அடைவார்கள். அவர்கள், சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைப்பொடிகளை தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர, பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும்.