வெண்தாமரைப் பூ பொடியை தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு, அடுப்பில் வைத்துச் சுண்டக்காய்ச்ச வேண்டும். அதை வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்துத் தினம் இரண்டு முறை குடித்தால் மனப் பரபரப்பு சீராகும். மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து வெண்தாமரை பூ கஷாயம் குடித்துவந்தால் மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களைப் போக்க வெண்தாமரை பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட மனநோய் குணமாகும். கல்லீரலின் திசுக்களை இந்த கஷாயம் பாதுகாக்கும். பலவிதமான நோய்களுக்கு மருந்து சாப்பிட்ட பின் சரியாகாமல் கடைசியாக தமிழ் மருத்துவத்தை நாடி பலர் வருகின்றனர்.