கருவேல மரத்தின் பட்டை குளிர்ச்சியானது, பாலுணர்வைக் கொண்டது. காயங்களை குணப்படுத்துவதில் கருவேல மரத்தின் பட்டைகள் மதிப்புமிக்கவை. கருவேல மரத்தின் பட்டைகளில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை இரத்தப்போக்கு மற்றும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. கருவேலம் பட்டைப் பொடி, ஈறுகளை மசாஜ் செய்வதற்கும் பற்களை சுத்தம் செய்வதற்கும் இந்த பொடி பயன்படுகிறது. பற்கள் மற்றும் ஈறுகளை பலப்படுத்தும், ஈறு வீக்கத்தைக் குறைக்கிறது. கருவேல பட்டைப்பொடி உமிழ்நீரின் காரத்தன்மையை உண்டாக்குகிறது. இது உமிழ்நீரின் pH ஐ அதிகரிக்கிறது, இது பற்களை துவாரங்கள், சிதைவுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது