வல்லாரையில் ஆர்த்ரிட்ஸ், கெளட் போன்ற முழங்கால் பிரச்சனையை போக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதே மாதிரி வாயு பிரச்சனை, அல்சர், எரிச்சலுடன் மலம் வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளை களைகிறது. இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் ஹைப்போகிளைசீமியா போன்ற நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க வல்லாரை உதவுகிறது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர். இரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இக்கீரையை பொடியை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.