வயதான பிறகு வரக்கூடிய மறதி என்னும் அல்சைமர், பர்கின்சன் என்னும் நோய், நரம்பியல் நோய்களை தடுக்கிறது. இலவங்கபட்டை பொடியனது, மூளை செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. பற்கள், ஈறுகள் வலுவாக இருக்கவும் சுவாசப் புத்துணர்ச்சிக்கும் பட்டைப்பொடி பயன்படுத்தப்படுகிறது. பற்சொத்தை, பற் சிதைவு, ஈறுகள் வீக்கம், ரத்தகசிவு போன்றவை பற்களின் பலவீனத்தால் வரக்கூடியவை. அதோடு பாக்டீரியாக்கள் வாய்க்குள் தங்கிவிடுவதாலும் வரக்கூடியவை. பட்டை பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருப்பவை. பட்டை நீரை வாய்க்கொப்புளித்துவந்தால் அது வாய்க்கிருமிகளை அழிப்பதோடு சிறந்த இயற்கை மவுத் வாஷாகவும் இருக்கும்.