நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது. உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. சாப்பிட்டுப்பார்த்தால் தான் தெரியும் அதன் வலிமை. நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு, நெருஞ்சில் பொடியை கசாயம் வைத்து குடித்து வர சரியாகிவிடும்.