நீரிழிவு கட்டுப்பட நீரிழிவு நோய் கட்டுப்பட சிறுகுறிஞ்சான் இலைப்பொடி அத்துடன் சம எடை அளவு நாவற்கொட்டைபொடி ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு,1 தேக்கரண்டி அளவு தூளை வாயில் போட்டுகொண்டு வெந்நீர் அருந்தி வர வேண்டும். இதை தொடர்ந்து 40 நாட்கள் வரை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். உடல்நலம் மேம்படும். நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு சாப்பிட்டு 4 மணி நேரத்திற்குள்ளாக நன்கு பசி எடுக்க வேண்டும். ஒரு சிலருக்கு பசி உணர்வு இல்லாததால் சரிவர சாப்பிட முடியாமல், உடல் ஆரோக்கியம் குறைகிறது. சிறுகுறிஞ்சான் இலைப்பொடியை கஷாயம் செய்து அருந்தி வருபவர்களுக்கு நல்ல பசி உணர்வு தூண்டப் பெற்று ,உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.