திரிபலாவில் இருக்கும் கசப்பு சுவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்து குளுகோஸின் அளவை சமநிலைப்படுத்தும். சைனஸ் பிரச்சினையையும் போக்கும். இந்தபொடி சுவாசப் பாதையில் அடைபட்டிருக்கும் சளியை நீக்கும். திரிபலா பொடி உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.