வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாழைப்பழங்கள் போன்று வாழைத்தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது தற்போது இது பொடியாகவும் வருகிறது. சிறுநீரக கற்களால் வலிமிகுந்த உபாதையை அனுபவிப்பவர்கள் வாழைத்தண்டுப்பொடியை கஷாயம் வைத்து குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறகூடும். இதை அவ்வபோது குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று காரணமாக உண்டாகும் வலி அசெளகரியங்களுக்கும் இவை சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. சிறுநீரக கோளாறுகளை தடுக்க வாழைத்தண்டு முதன்மையாக செயல்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.