வெந்தயப் பொடியைவைத்து குடிநீராக அவ்வப்பொழுது குடித்துவர வயிற்று வலி, வெள்ளை, சீதக்கழிச்சல், காய்ச்சல், உடல் சூடு, வயிற்று பொருமல் போன்ற நோய்கள் தீரும். வெந்தயப் பொடியை நீரில் கரைத்து, தலையில் ஊற வைத்து குளித்து வர முடி நன்கு வளரும். முடி உதிர்வதும் நிற்கும். மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும். வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும். கணையம், கல்லீரல் வீக்கம், வயிற்றுப் போக்கு, அஜீரணம், நெஞ்சு எரிச்சல்… போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வெந்தயம் ஒரு மாமருந்து. வயிற்றுக் கோளாறுக்கு மட்டுமல்லாது, வெந்தயநீர் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். சிறுநீர்ப்போக்கை சீராக்கும்.